24 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சிகரட் விற்க தடை
சிகரட் உட்பட புகையிலை தயாரிப்புகளை விற்பனை செய்தல், கொள்வனவு செய்தல் மற்றும் மேம்படுத்தல் ஆகியவற்றுக்கான வயதெல்லை அடுத்த ஆண்டு முதல் 21 வயதில் இருந்து 24 வயதாக அதிகரிக்கப்படுகிறது என புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் கலாநிதி சமாதி ராஜபக்ச (Samadi Rajapaksa) தெரிவித்துள்ளார்.
புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான அதிகார சபை சட்டத்தில் 2022 ஆம் ஆண்டு திருத்தங்களை செய்ய தீர்மானித்துள்ளதால், இந்த மாற்றத்தை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்ட பின்னர், மேலும் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்திற்கு அமைய புகையிலையை பிரசாரம் செய்தல், பயன்படுத்துதலை ஊக்குவித்தல், அனுசரணை வழங்குதல் என்பன தடை செய்யப்பட்டுள்ளன.
புகையிலை தயாரிப்புகளை சமூக ஊடகங்கள் வாயிலாக பிரசாரம் செய்வதை புதிய சட்டத்தின் கீழ் தடை செய்ய எதிர்பார்த்துள்ளோம். இதனை தவிர சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ள புகையிலை தயாரிப்புகள் சம்பந்தமான அனைத்து விளம்பரங்களையும் நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சமாதி ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
