நாடு முழுவதும் பணிப்புறக்கணிப்பு போராட்டங்கள் முன்னெடுப்பு (Photo)
நாடளாவிய ரீதியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வவுனியா
வவுனியா வைத்தியசாலையில் கடமை புரியும் தாதிய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட நான்கு பிரிவினர் சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தாதிய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு ஆதரவாக வவுனியா வைத்தியசாலையில் இன்று (09) காலை 7 மணி தொடக்கம் நாளை (10) காலை 7 மணிவரை குறித்த அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள், மருந்து கலவையாளர்கள், கதிர்பட இயக்குனர்கள் உள்ளடங்கலாக நான்கு பிரிவினர் குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பளப் பிரச்சினை, மேலதிக கொடுப்பனவு வழங்கல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு மத்தியிலும் அவசர சிகிச்சைப் பிரிவுகள், விபத்துக்கள் பிரிவு என்பவற்றில் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும், இப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக விடுதிகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளர்கள் மற்றும் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருவோர் பல்வேறு சிரமங்களையும் எதிர் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார உத்தியோகத்தர் சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள வேலை நிறுத்தத்தில் மட்டக்களப்பு மாவட்ட பொது சுகாதார பரிசோதகர்களும் இணைந்துள்ளனர்.
இதனால் இம்மாவட்டத்தில் பொதுச் சுகாதார பரிசோதகர்களின் அலுவலகங்கள் யாவும் முற்றாக மூடப்பட்டிருந்தன.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகளிலும் சுமார் 72 பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கடமை புரிகின்றனர்.
பொதுச் சுகாதார பரிசோதகர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக கோவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் உட்பட டெங்கு ஒழிப்பு நடடிவடிக்கைகளும் மாவட்டத்தில் ஸ்தம்பதமடைந்துள்ளன.
வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக இம்மாவட்டத்தில் அன்டிஜன் மற்றும் பீசீஆர் பரிசோதனை நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை மாவட்டத்தில் ஏனைய சுகாதார ஊழியர்களும் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை
நாடு முழுவதும் சுகயீன விடுமுறை அனைத்து வைத்தியசாலைகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதனை தொடர்ந்து திருகோணமலை மாவட்டத்திலும் இந்த சுகயீன விடுமுறை போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பதினாறு தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இந்த சுகயீன விடுமுறை போராட்டத்தை மேற்கொண்டுள்ளதாகவும், இதனால் நோயாளர்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பதினாறாவது மே பதினெட்டு 23 மணி நேரம் முன்

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
