கொக்கட்டிச்சோலை சோலையகம் காணி உரிமையாளரிடம் கையளிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் தலைமையகங்களில் ஒன்றாகக் கருதப்படும் கொக்கட்டிச்சோலை சோலையகம் காணி உரிமையாளரிடம் கையளிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு - பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சோலையகம் படை முகாமிலிருந்த சுமார் இரண்டு ஏக்கர் காணியையே இவ்வாறு கையளிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் முன்னெடுத்த நடவடிக்கைகளின் பயனாக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அப்பகுதிக்கு இன்று விஜயம் செய்த இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் இது தொடர்பில் இராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடியதுடன், குறித்த காணியை விரைவாக உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
குறித்த காணியானது தமிழீழ விடுதலைப்புலிகள் காலத்தில் புலிகளின் தலைமையகங்களுள் ஒன்றாக இருந்ததுடன், கிழக்கு இராணுவத்தினரால் மீட்கப்பட்டதன் பின்னர் இராணுவத்தின் முகாமாக இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் இன்று அக்காணியை உரிமையாளரிடம் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த சந்திப்பில் 231படைப்பிரிவின் கொக்கட்டிச்சோலை முகாம் பொறுப்பதிகாரி லெப்டினன் கேணல் ஹர்சன குணரெட்ன உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
2007 ஆம் ஆண்டு வரையில் விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாணத்தின் முக்கிய நிர்வாகத்தளமாக சோலையகம் இருந்த நிலையில், கிழக்கில் படையினர் காலூன்றிய பின் அது இராணுவ முகாமாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.









தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

குணசேகரன் தலைமையிலேயே பார்கவி-தர்ஷன் திருமணத்தை நடத்தும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தெறி எபிசோட் புரொமோ Cineulagam
