பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தலுக்கு முன் வெலிக்கந்தையில் இருந்து கொழும்பு சென்ற இராணுவ வாகனம்
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரான பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவரை 90 நாட்கள் விளக்கமறியலில் வைத்து விசாரணை மேற்கொள்ள அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
ரவீந்திரநாத்தினுடைய நெருங்கிய நண்பராக இருந்த கலைப்பீடத்தின் பீடாதிபதி கலாநிதி பாலசுகுமாரின் பதவி விலகலுக்காக இந்த கடத்தல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டது.
இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை நடவடிக்கைகளில் பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கண்காணிப்பில் இயங்கிய இரகசிய படைப்பிரிவு ஒன்றினாலேயே ரவீந்திரநாத் கடத்தப்பட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது.
இதற்கு மத்தியில், ரவீந்திரநாத் கடத்தலுக்கு முன் வெலிக்கந்தையில் இருந்து கொழும்பு சென்ற இராணுவ வாகனம் ஒன்று தொடர்பில் தற்போது தகவல்கள் கசிந்துள்ளன.
இவ்விடயம் குறித்து விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

ஸ்ருதி அம்மா செய்த கேவலமான வேலை, முத்து, ரவிக்கு தெரிந்த உண்மை.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி., அமெரிக்காவின் Patriot ஏவுகணைகளை தகர்த்தெறியும் ரஷ்யாவின் S-400 News Lankasri
