வரவு செலவுத் திட்டத்திற்கு முன் நியாயமான வரிக் கொள்கை கோரி தொழில் வல்லுநர்கள் வலியுறுத்தல்
நியாயமான வரிக் கொள்கையை அறிமுகப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் உள்ளிட்ட தொழில்வல்லுநர்கள் மற்றும் மாதச் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு அதிக வரிச்சுமை விதிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டியே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க, கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வரித் திருத்தங்கள் போதுமானதாக இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சம்பளம் பெறும் ஊழியர்களின் மொத்த மாத வருமானத்தின் அடிப்படையில் வரி அறவிடப்படுகின்ற போதிலும், வணிகர்களிடம் செலவுகளைக் கழித்த பின்னரான இலாபத்தின் அடிப்படையிலேயே வரி அறவிடப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். இது அநீதியான நடைமுறையாக பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அநீதியான முறையில் அறவிடப்படும் வரி
தொழில் வல்லுநர்கள் வரியிலிருந்து முழுமையான விலக்கைக் கோரவில்லை என்றும், நியாயமான மற்றும் செலுத்தக்கூடிய வரி முறையையே எதிர்பார்ப்பதாகவும் அரசாங்கத்திடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், தொழில் வல்லுநர்களின் அமைப்புகள் இணைந்து தயாரித்த வரிச்சலுகை முன்மொழிவுகள் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் ஜனாதிபதி செயலகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும், இதுவரை அரசாங்கத்துடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகள் இடம்பெறவில்லை என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு, தற்போதைய வரி முறையிலுள்ள ஏற்றத்தாழ்வுகள் நீக்கப்படும் என தொழில் வல்லுநர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
4 வயது சிறுவனின் உடல் பாகங்களை அறுத்தெடுத்த கொடூரன்: AI செயலி மூலம் தீட்டிய சதி திட்டம் News Lankasri