மக்களைப் பாதுகாக்க ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைய தயார்: ஜீ.எல்.பீரிஸ் அதிரடி அறிவிப்பு
ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பரந்துபட்ட எதிர்க்கட்சியை கட்டியெழுப்பவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
மக்கள் பாதுகாப்பு
மிகவும் ஆபத்தான பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக மக்களைப் பாதுகாப்பதே தமது எதிர்பார்ப்பு என பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பரந்துபட்ட எதிர்க்கட்சியை கட்டியெழுப்ப உள்ளதாகவும் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கட்டம்பே ராஜோபவனாராம விகாரையின் தலைவர் அனுநாயக்க கப்பிட்டியகொட சிறிவிமல தேரரை சந்தித்துக் கலந்துரையாடிய பின்னரே அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NEW பூதாகரமாகும் செம்மணி விவகாரம்! தவிக்கும் தமிழ் உறவுகள் 24 நிமிடங்கள் முன்

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
