இலங்கையில் 50 வருடங்களின் பின்னர் பாவனைக்கு வந்துள்ள பொருட்கள்
இலங்கையில் 50 வருடங்களின் பின்னர் விளக்குகள் மற்றும் கரி இஸ்திரி பெட்டி பாவனைக்கு வந்துள்ளன.
நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக சிம்னி விளக்குகள் மற்றும் கரி இஸ்திரி பெட்டிகள் மீண்டும் சந்தை ஊடாக பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு சிம்னி விளக்குகள் மற்றும் கரி இஸ்திரி பெட்டிகளுக்கு நுகர்வோரிடம் அதிக கோரிக்கை ஏற்பட்டுள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய குறித்த இரண்டு பொருட்களும் விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
சிம்னி விளக்குகள் 1500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், விளக்குகளின் போத்தல்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கரி சூடாக்கி ஆடைகளை தேய்க்கும் இஸ்திரி பெட்டிகள் 2000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக வர்த்தக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சமகால அரசாங்கத்தின் செயற்பாடு காரணமாக இலங்கை 50 வருடங்கள் பின்நகர்த்துள்ளதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் ஒருவர் கடுமையாக சாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.






யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
