அரசாங்க நிதி கிராமப்புறங்களுக்கு செல்லும்போதே உற்பத்திகள் முறையாக நடைபெறும்: சிவனேசதுரை சந்திரகாந்தன்
அரசாங்கம் வழங்கும் நிதியானது சரியான முறையில் கிராமப்புறங்களுக்குச் செல்லும்போதே உற்பத்திகள் சரியான முறையில் நடைபெறும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் சுபிட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்திற்கமைவாக நாடளாவிய ரீதியில் 'கிராமத்துக்குக் கிராமம் வீட்டுக்கு வீடு' எனும் விசேட நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் புதிய கோப் பிரஸ் வர்த்தக நிலையங்கள் நிறுவப்பட்டு வருகின்றன.
கூட்டுறவுச் சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் வழிகாட்டலில் வினைத்திறன் மிக்க கூட்டுறவுச் சங்கங்களைத் தெரிவு செய்து இவ்வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகிறது.
அதற்கு அமைவாகக் கிழக்கு மாகாணத்தில் 16 கோப் பிரஸ் வர்த்தக நிலையங்களை நிறுவுவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் மட்டக்களப்பு படுவான்கரைக்கான முதலாவது புதிய கோப் பிரஸ் வர்த்தக நிலையம் இன்று (15) திகதி வவுணதீவில் திறந்து வைக்கப்பட்டது.
வவுணதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட ஈச்சந்தீவு, கன்னன்குடா ப.நோ.கூ.சங்கத்தின் தலைவர் நா. உருத்திரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டு புதிய கோப் பிரஸ் வர்த்தக நிலையத்தினை நாடா வெட்டி உத்தியோகப் பூர்வமாகத் திறந்து வைத்துள்ளார்.
இந்நிகழ்விற்கு விசேட அதிதிகளாகக் கிழக்கு மாகாணம் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளருமான ஏ.எல்.எம். அஸ்மி, மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், மட்டக்களப்பு கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.வீ.தங்கவேல், உதவி பிரதேச செயலாளர் எஸ். சதாகரன், பிரதேச செயலக கணக்காளர் எஸ்.சுந்தரலிங்கம், பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் எம்.கோமளேஸ்வரன், மட்டக்களப்பு கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலகத்தின் அனைத்து கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மட்டுப்படுத்தப்பட்ட ஈச்சந்தீவு - கன்னன்குடா பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் முகாமையாளர் உள்ளிட்ட பணியாளர்களும் இதன்போது கலந்து கொண்டனர்.
கிராம மக்களுக்குக் குறைந்த விலையில் அனைத்து பொருட்களையும் இலகுவான முறையில்
விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகள் கோப் பிரஸ் வர்த்தக நிலையங்கள் ஊடாக
மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 5 மணி நேரம் முன்
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam