இலங்கை மக்களுக்கான கோவிட் தடுப்பூசி தொடர்பில் வெளியான தகவல்
நாட்டில் தற்போது கையிருப்பில் உள்ள கொரோனா தடுப்பூசிகளின் இருப்பு எதிர்வரும் ஜுலை மாதத்துடன் காலாவதியாகும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 30ஆம் திகதிக்குப் பிறகு பொது இடங்களில் நுழையும் போது முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதா என்பதை சரிபார்ப்பதற்கும் இந்த செயலியை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மக்களுக்கு தேவையான தடுப்பூசிகள் தற்போது நாட்டில் உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்று காலத்தின் போது ஏற்படும் சிக்கல்களை குறைப்பதற்கு பூஸ்டர் தடுப்பூசுி பெறுவதற்கு அனைத்து மக்களுக்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனா நோயாளர்களுக்கு ஒக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.




