கடும் உஷ்னத்தால் நீரின்றிக் கருகும் வோளாண்மைச் செய்கை
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் உஷனமான காலநிலைக்கு மத்தியில் மக்கள் தமது அன்றான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இந்நிலையில் கிராமிய மட்ட நீர்த் தேக்கங்களிலும் நீர் வற்றி வருவதை அவதானிக்க முடிகின்றது.
இது இவ்வாறு இருக்க தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள காலபோக வேளாண்மைச் செய்கை நீரின்றிக் கருகி வருவதையும் காணமுடிகின்றது.
வேளாண்மைச் செய்கை
தமது வாழ்வாதாரத்திற்காக மேற்கொண்டுள்ள வேளாண்மைச் செய்கையை எவ்வாறாயினும் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்குடன் விவசாயிகள் அருகிலுள்ள நீர் நிலைகளிலிருந்து நீர் பம்பி மூலம் வேளாண்மைச் செய்கைக்கு நீரை இறைத்துப் பாய்ச்சி வருவதையும் அவதானிக் முடிகின்றது.

கால்நடைகளும் உஷனத்திற்குத் தாக்குப்பிடிக்காமல் மர நிழல்களைத் தேடி வருவதோடு, பறவையினற்களும், நீர் நிலைகளை நாடிச் செல்வதையும் காணமுடிகின்றது.