அரசாங்க குடியிருப்புகளை ஒப்படைக்காத அமைச்சர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
அரசாங்கத்திற்கு சொந்தமான குடியிருப்புகளை ஒப்படைக்காத முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக இன்று முதல் வழக்கு தொடரப்படும் என நீதி, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபை, உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி அனைத்து குடியிருப்புகளையும் இன்று(30.10.2024) முன்னாள் அமைச்சர்கள் ஒப்படைக்க வேண்டும் என அமைச்சு அறிவித்துள்ளது.
இந்நிலையில் 12 முன்னாள் அமைச்சர்கள் இதுவரை தங்களுடைய அரசாங்க குடியிருப்புகளை ஒப்படைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
நீர் மற்றும் மின்சார கட்டணம்
நிலுவையில் உள்ள நீர் மற்றும் மின்சார கட்டணத்தை முழுமையாக செலுத்திய பின்னர் உத்தியோகபூர்வ இல்லங்களை ஒப்படைக்குமாறு முன்னாள் அமைச்சர்களுக்கு அமைச்சு அண்மையில் அறிவித்திருந்தது.
இதன்படி நிலுவை கட்டணங்கள்களை ஏற்க மாட்டோம் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், முன்னாள் அமைச்சர்களின் குடியிருப்புகளில் உள்ள தளபாடங்கள் மற்றும் சொத்துக்கள் மீதான முதற்கட்ட ஆய்வு நிறைவடைந்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |