நவீனமயமாக்கப்படும் ஏறாவூர் பொது சந்தை! வியாபாரிகளை அடையாளம் காண்பதற்கு புதிய குழு
ஏறாவூர் நகர சபைக்குரிய பொது சந்தையில் 1987ஆம் ஆண்டில் இறுதியாக கடைகளைக் கொண்டிருந்த பொது சந்தை வியாபாரிகளை அடையாளம் காணும் முதற்கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஏறாவூர் நகர சபைக் குழு தெரிவித்துள்ளது.
தற்போது தூர்ந்து சிதைவடைந்து காணப்படும் ஏறாவூர் நகர சபைக்குரிய பொதுச் சந்தையை நவீனமயப்படுத்தி மீளத் துவங்குவதற்கான முயற்சியாக இந்த நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
சந்தை வியாபாரிகள்
இந்த சந்தை கிழக்கில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக 1987ஆம் ஆண்டுக்குப் பின்னர் இயங்கவில்லை.
தாம் கடைகளைக் கொண்டிருந்தமைக்கான ஆவணங்களுடன் சமுகமளிக்குமாறு சந்தை வியாபாரிகள் 93 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது 61 பேர் ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளனர். ஏனையோர் அறிவிக்கப்பட்ட தினங்களில் முன்னிலையாகுவர் என தாம் எதிர்பார்ப்பதாக ஏறாவூர் நகர சபைக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
நகரசபை குழு
ஏறாவூர் நகர சபை குழுவில் மாகாண சிரேஷ்ட ஆய்வு உத்தியோகத்தர் என்.ஐங்கரன், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ. ஹாறூன், வருமான பரிசோதகர் என்.வாஹித், நகர சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எப்.பாத்திமா ஸப்ரினா உட்பட நான்கு நகர சபை உறுப்பினர்கள் பொதுச் சந்தை வியாபாரிகளை அடையாளம் காணும் விடயத்திற்கென நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆதரவு வழங்காமல் பங்காளியாகுங்கள்! கூட்டமைப்பினருக்கு அழைப்பு |






சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
