தேர்தல் நியமனப் பத்திரம் ஏற்கும் நடவடிக்கைகள் மட்டக்களப்பில் ஆரம்பம்
எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்திலும் நியமனப் பத்திரம் ஏற்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த நடவடிக்கைகள் இன்று(04.10.2024) முதல், ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியும் மாவட்ட செயலாளருமான ஜேஜே முரளிதரன் தெரிவித்துள்ளார்.
மேலும், “மாவட்டத்தில் 15க்கும் மேற்பட்ட சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. இன்று முதலாவது நியமன பத்திரம் தாக்கல் செய்யும் நடவடிக்கை இடம்பெற்றது.
வாக்களிக்க தகுதி
மாவட்டத்தில் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வற்காக எட்டு பேர் போட்டியிடுகின்றனர்.

நான்கு இலட்சத்து 49,686 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார்கள். மட்டக்களப்பு பட்டிருப்பு கல்குடா ஆகிய தேர்தல் தொகுதிகளில் தேர்தல்கள் இடம் பெற உள்ளன” என மாவட்ட தெரிவித்தாட்சி அதிகாரி கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri
சீனாவா அமெரிக்காவா என தெரிவு செய்ய வேண்டிய அவசியம் பிரித்தானியாவிற்கு இல்லை- ஸ்டார்மர் News Lankasri