போரதீவுப்பற்றில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கோவிட் தடுப்பூசி வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இரண்டாவது தினமாகவும் இன்று தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் நடைபெற்றன.
வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்தில் போரதீவுப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் விவேகானந்தராஜா தலைமையில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் நடைபெற்றன.
வீதி அபிவிருத்தி திணைக்களம், ஆடைத்தொழிச்சாலை, கமநலகேந்திரநிலையம், நீர்ப்பாசன திணைக்களம் உட்படப் பலருக்கு இன்று தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.
இன்றைய தினம் இராணுவத்தினர் தடுப்பூசி ஏற்றுவதற்கு வருகை தந்தோருக்கான உதவிகளை
வழங்கினர்.




பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri
FIFA உலகக் கிண்ணம்... குழுச் சுற்றில் கட்டாயம் பார்க்க வேண்டிய ஐந்து முக்கிய ஆட்டங்கள் News Lankasri