கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று அமுலாகும் நடைமுறை
வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வரும் இலங்கையர்களுக்கு பைசர் கோவிட் தடுப்பூசியை வழங்குவதற்காக இலங்கை விமானப்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுப்பூசி மையம் ஒன்றை இன்று ஸ்தாபித்துள்ளனர்.
வாரத்தின் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் செயல்படும் இந்த தடுப்பூசி மையம், வெளிநாடுகளில் இருந்து வரும் இலங்கையர்களுக்கு அவர்களின் தடுப்பூசி நிலைக்கு ஏற்ப கோவிட் தடுப்பூசியை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
தடுப்பூசி போடாதவர்களுக்கு முதல் தடுப்பூசியும், முதலாது தடுப்பூசி போட்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசியும் அங்கு போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இரண்டு தடுப்பூசியும் பெற்றவர்களுக்காக பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இலங்கையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தீவிரமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.