சிறுபான்மை மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்: அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கரு ஜயசூரியவுடன் சந்திப்பு
நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவரும், முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரியவை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர்கள், கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் இன்றைய தினம் கொழும்பில் வைத்து சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கம், கடந்த காலங்களில் சிறுபான்மையினருக்கு இடம் பெற்ற அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருவதற்காக, விசேடமாக முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு விடயத்தில் எதிர்ப்பினை வெளியிட்டமைக்கு அவ்வமைப்புக்கு தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
அத்துடன், சிறுபான்மை சமூகம் தற்போது எதிர்நோக்கியுள்ள காணிப் பிரச்சினை, இராணுவ மயமாக்கல் போன்ற பல பிரச்சினைகள் தொடர்பிலும் தெளிவுப்படுத்தியுள்ளனர்.
இந்த சந்திப்பில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், கட்சியின் தவிசாளர் அமீர் அலி, செயலாளர் எஸ்.சுபைர்தீன், சிரேஷ்ட பிரதித் தலைவர் சஹீட் மற்றும் பொருளாளர் ஹுசைன் பைலா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.






சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri

அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam
