பாடசாலை அதிபர்களின் பிரச்சினை! கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
பாடசாலை அதிபர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் எதிர்கட்சி தலைவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்''பாடசாலை அதிபர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பாக தாம் தொடர்ச்சியாக அவதானம் செலுத்தி வருகின்றோம்.
அமைச்சரவை பத்திரம்
இந்த விடயம் தொடர்பாக நான் அமைச்சரவை பத்திரமொன்றை தாக்கல் செய்துள்ளேன். ஆசிரியர் தரத்தில் இருக்கும் ஒருவர் அதிபர் தரத்திற்கு தகுதியின் அடிப்படையில் மாற்றப்படும் போது அவர்களின் அடிப்படை கொடுப்பனவு குறைவடைகின்றது. இது காலம் காலமாக இருந்து வரும் பிரச்சினையாகும்.
மேலும் தொடர்பாடல் கொடுப்பனவு மற்றும் போக்குவரத்து கொடுப்பனவுகளை திறைசேரியின் உதவியுடன் பெற்றுக்கொடுப்பதற்கு நடடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.'' என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

திருமணத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன் கணவருடன் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே.. வீடியோ இதோ Cineulagam

Optical illusion: படத்தில் '44' மற்றும் '33' என்ற மாறுபட்ட இலக்கங்களில் '88' எங்கே மறைந்துள்ளது? Manithan
