பண்ணையாளர்களின் பிரச்சினைக்குப் பின்னால் பொலிஸாரின் சதியா..! மக்கள் விசனம்
கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் உள்ள பொலிஸ் அதிகாரிகள் மயிலத்தமடு - மாதவனை பொலிஸ் நிலையத்தில் இருந்து கொண்டு, சட்டத்துக்குப் புறம்பாக செயல்படுபவர்களை ஆதரவு வழங்குவதால், கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரியவருகையில்,
நீண்டகாலமாகவே மயிலத்தமடு மாதவனை கால்நடை வளர்ப்பு பண்ணையாளர்கள் மிக மோசமான பொருளாதாரத்தையும் வாழ்வாதாரத்தையும் இழந்து கொண்டிருக்கின்றார்கள்.
அரசியல் சதிகளில் சிக்கி தவிக்கும் மக்கள்
அண்மைக்காலமாக அந்த சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. ஒரு பண்ணையாளர் மோசமாக தாக்கப்பட்டு, கடத்தப்பட்ட நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த போராட்டமானது அவர்கள் நான்காவது வருடத்தில் இன்று வரையிலும் தங்களுக்கான நீதி வேண்டும், மேய்ச்சல் தரை வேண்டும், கால்நடைகளுக்கான நீதி நியாயம் வேண்டும் என்பதற்காக தொடர்ச்சியாக சித்தாண்டியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருக்கின்றது.

அரச தரப்பில் இருக்கின்ற அமைச்சர்கள், ஜனாதிபதி வரையிலும் இந்த பிரச்சனையை தீர்க்கப்பட வேண்டும் என்று பல கோரிக்கைகள் வைக்கப்பட்டது. பல அழுத்தமான போராட்டங்கள் நடத்தப்பட்டது. இன்றும் அந்த போராட்டம் நடந்து கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் தொடர்ச்சியாகவே பசு வதைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
பண்ணையாளர்களின் தீர்க்கப்படாத பிரச்சினை
மனிதர்களுக்குக்கூட இன்றைக்கு ஒரு அச்சுறுத்தலான, அங்கு இருக்கின்ற பண்ணையாளர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். அங்கு அவர்கள் சுதந்திரமாக கால்நடைகளை பராமரிக்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டிருக்கின்றது. புல் தரைகள் அத்துமீறி செயல்படும் நபர்களால் மிக மோசமாக அழிக்கப்பட்டு கொண்டிருக்கிறது.
தீ வைத்து எரிக்கப்பட்டிருக்கிறது, உழவளிக்கப்பட்டிருக்கின்றது. கால்நடைகளுக்கு உணவு இல்லாத ஒரு இடத்தில் தற்சமயம் அந்த கால்நடைகளை காடுகளுக்குள் கொண்டு செல்லுமாறு மாவட்ட அரசாங்க அதிபர் தொடக்கம் அனைத்து அதிகாரிகளும் கூறியிருக்கிறார்கள்.

கால்நடை வளர்ப்பைப் பற்றி தெரிந்தவர்கள் அல்லது அதைப்பற்றி தெரியாதவர்கள் தெரிந்தாவது வைத்துக்கொள்ள வேண்டும், புல் தரையானது பத்தைக்குள் முளைப்பதில்லை.
புல் தரையானது ஒரு வெட்டவெளியில் தான் புல் தரை ஏற்படுத்தப்பட்டிருக்கும். இது இயற்கையாகவே அமைக்கப்பட்ட ஒரு பகுதிதான் அந்த மயிலத்தமடு மாதவனை. நீண்டகாலமாக அவர்கள் அந்த இடத்தில் அந்த கால்நடைகளை பராமரித்து வருகிறார்கள் என்றார்.
மரண அச்சுறுத்தலால் விசாரணை வலையில் சிக்கிய நாமல் மற்றும் மகிந்த! வலுக்கட்டாயமாக பெறப்பட்டதா வாக்குமூலம்
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
தமிழ்நாடு, ஆந்திராவில் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல்... கர்நாடகாவில் ஜெயிலர் 2 எவ்வளவு வசூல் தெரியுமா? Cineulagam
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan