இல்லாத இனவாதத்தை பேசுவதனாலேயே சிக்கல்:எஸ்.எம்.மரிக்கார்
நாட்டில் இல்லாத இனவாதம் தொடர்பாகக் கதைப்பது தான் இங்குள்ள பிரச்சினை என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்துக்குச் செல்லும்போது அந்தந்தப் பகுதி மக்களை திருப்திபடுத்தும் வகையில் ஜனாதிபதி கருத்துகளை முன்வைக்கின்றார். இது ஏற்புடையது அல்ல.
அரசாங்க தலைவர் பொது கொள்கையுடன் பயணிக்க வேண்டும். நாட்டில் எந்த பகுதிக்கு சென்றாலும் ஒரே கொள்கை அடிப்படையிலேயே கருத்துகளை முன்வைக்க வேண்டும்.
இனவாதம்
ஆனால் தமிழ் டயஸ்போராக்களை திருப்திப்படுத்தும் விதத்திலேயே வடக்குக்கு சென்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உரையாற்றுகின்றார்.

நாட்டில் அனைத்து இன மக்களும் நல்லிணக்கத்துடன்தான் வாழ்கின்றனர். அதனால் இனவாதத்தை தோற்றுவிக்கும் விதத்தில் கருத்துக்களை எவரும் முன்வைக்ககூடாது.
அநுரகுமார திஸாநாயக்க என்பவர் எதிர்க்கட்சித் தலைவர் அல்லர். அவர் நாட்டின் ஜனாதிபதி. ஆகவே, பொறுப்புடன் கருத்துகளை வெளியிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 23 மணி நேரம் முன்
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri