ஸ்ரீலங்கன் நிதிப் பரிமாற்ற மோசடி : விசாரணை நடத்த கோரிக்கை
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் நிதிப் பரிமாற்றம் ஒன்றில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் பாரிய தவறு குறித்து அரசாங்கம் உடனடி விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தியுள்ளார்.
விமான சேவை நிறுவனத்தின் சென்னை கிளை மற்றும் டுபாய் தொடர்பான முகவர் நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவு, தவறுதலாக வேறொரு வங்கிச் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நிதி வேறு கணக்கிற்கு மாற்றப்பட்டு
விமான நிறுவனத்தின் சென்னை கிளை மற்றும் துபாய் செயல்பாடுகளுடன் தொடர்புடைய கொடுப்பனவுகள், பிழையான காரணத்தினால் அபுதாபி இஸ்லாமிய வங்கியில் உள்ள ஒரு கணக்கில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு தவறுதலாக அனுப்பப்பட்ட சுமார் 97,450 டிர்ஹாம் (AED) நிதி பின்னர் அங்கிருந்து மற்றொரு வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிதி வேறு கணக்கிற்கு மாற்றப்பட்டதன் காரணமாக, அதனை மீண்டும் மீட்டெடுப்பதில் பெரும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து தமக்கு நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்த தயாசிறி ஜயசேகர, இந்தச் சம்பவம் குறித்து உண்மைகளை கண்டறிய அரசாங்கம் முறையான மற்றும் வெளிப்படையான விசாரணையை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரித்தானிய அரசியலில் மாறிய காட்சிகள்: வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் முன்னாள் துணைப்பிரதமர் News Lankasri