பிரியந்தவின் படுகொலை இஸ்லாமுக்கு எதிரானது: பாகிஸ்தானிய இஸ்லாமிய அறிஞர்கள் தெரிவிப்பு
இலங்கையைச் சேர்ந்த பிரியந்த தியவதன கொடூரமான கூட்டு சித்திரவதை செய்து படுகொலை செய்தமையை, பாகிஸ்தானில் உள்ள முன்னணி இஸ்லாமிய அறிஞர்கள் கண்டித்துள்ளதோடு, இது "இஸ்லாமுக்கு எதிரான" செயல் மற்றும் "சட்டத்திற்கு புறம்பான கொலை" எனவும்,வெள்ளிக்கிழமையை "கண்டன நாள்" எனவும் அறிவித்துள்ளனர்.
பல இஸ்லாமியப் பிரிவுகளைச் சேர்ந்த மதகுருமார்கள் மற்றும் சட்ட வல்லுனர்களைக் கொண்ட பாகிஸ்தான் உலமா சபை, இலங்கை உயர்ஸ்தானிகரை சந்தித்து ஆறுதல் கூறியதன் பின்னர் அவருடன் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இந்த அறிவிப்பை வெளியிட்டது.
இலங்கையில் உள்ள இலங்கை தூதரகத்தில் ஒரு கூட்டறிக்கையை வாசித்து, குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு பிரிவுகளின் மதகுருமார்களுக்கு அழைப்பு விடுத்த, இஸ்லாமிய உலமா சபையின் தலைவர் கலாநிதி கிப்லா அயாஸ், இந்த கொடூரமான நிகழ்வுக்கு தங்கள் இரங்கலையும் ஒருமைப்பாட்டையும் தெரிவிக்க பல்வேறு சமயங்களைச் சேர்ந்த அனைத்து அறிஞர்களும் கூடியுள்ளனர்.
பிரியந்த தியவதன படுகொலை செய்யப்பட்டமை மனிதாபிமானமற்ற செயல் எனவும் ஆதாரமின்றி யாரையும் அவதூறாக குற்றம் சாட்டுவது ஷரியா சட்டத்திற்கு இணையாக அமையாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
உலமாக்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை உயர்ஸ்தானிகர் வைஸ் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம, "இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்ததற்காக பாகிஸ்தான் அரசாங்கத்தை நாங்கள் பாராட்டுகிறோம் என்றுமு் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 22 மணி நேரம் முன்

Brain Teaser Maths: கணக்கு புலிகளுக்கே சவால் விட்ட புதிர்... உங்களால் தீர்க்க முடியுமா பாருங்கள்? Manithan

அமெரிக்க - சீனா வர்த்தக ஒப்பந்தம்... முகேஷ் அம்பானியை விட மூன்று மடங்கு சம்பாதித்த நபர் News Lankasri

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri
