சூடுபிடிக்கும் பிரியந்தவின் கொலை விவகாரம்:100 இற்கும் மேற்பட்ட சி.சி.ரி.வி காட்சிகளுடன் தீவிர விசாரணை
பாகிஸ்தானின் சியால்கோட் நகரில் கொலை செய்யப்பட்ட பிரியந்த குமார தொடர்பான வழக்கை தினமும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள பஞ்சாப் மாகாண அரசு தீர்மானித்துள்ளது.
நீதியமைச்சர் முகமத் பஷாரத் ராஜாவின் தலைமையில் சட்டம் மற்றும் ஒழுங்கிற்கான மாகாண அமைச்சரவை கூடியபோது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,பிரியந்த குமாரவின் கொலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக விசேட குழுவொன்று வழக்கு தாக்கல் செய்துள்ளதுடன்,பிரியந்த குமார பணிபுரிந்த ராஜ்கோ ஆடைத்தொழிற்சாலையில் இந்த விசேட குழு சோதனை நடவடிக்கையிலும் ஈடுப்பட்டுள்ளது.
இதன்போது 100 இற்கும் மேற்பட்ட சி.சி.ரி.வி CCTV கெமராக்களில் இருந்து பெறப்பட்ட 12 மணித்தியால காட்சிகள் இந்த விசேட குழுவின் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
பிரியந்த குமாரவின் கொலை தொடர்பில் 139 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களில் 34 பேர் பிரதான சந்தேகநபர்களாகவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் சியல்கோர்ட் நகரில் தொழிற்சாலை முகாமையாளராக பணியாற்றி வந்த 48 வயதான பிரியந்த குமார கடந்த வெள்ளிக்கிழமை அடித்துக் கொல்லப்பட்டு அவரது உடல் எரியூட்டப்பட்டது.
இந்நிலையில்,பாகிஸ்தான் லாகூரியிலிருந்து புறப்பட்ட யு.எல்.186 என்ற இலக்கத்தைக் கொண்ட ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமானம் மூலம் அவரது உடலை தாங்கிய பேழை நாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், பிரேத பரிசோதனையின் பின்னர் பிரியந்தவின் சடலம் உறவினர்களிடம் அஞ்சலிக்காக ஒப்படைக்கப்பட்டு பெரும்பாலானோரின் கண்ணீருக்கு மத்தியில் அடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்...
பெரும்பாலானோரின் கண்ணீருக்கு மத்தியில் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள பிரியந்தவின் சடலம்
பிரியந்தவின் கொடூர மரணம் குறித்து அறியாத தாயார்! குடும்பத்தினர் வெளியிட்டுள்ள உருக்கமான தகவல்