பாகிஸ்தானில் கொடூரமாக கொல்லப்பட்ட பிரியந்த! பிரதான சந்தேகநபர் அளித்துள்ள வாக்குமூலம்
பாகிஸ்தானின் சியல்கோர்ட் நகரில் தொழிற்சாலை முகாமையாளராக பணியாற்றி வந்த 48 வயதான பிரியந்த குமார கடந்த வெள்ளிக்கிழமை அடித்துக் கொல்லப்பட்டு அவரது உடல் எரியூட்டப்பட்டது.
இந்நிலையில், குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபர்கள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனைப் பெற்றுக்கொடுக்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உறுதியளித்திருந்தார்.
பாகிஸ்தானில் உள்ள ராஜ்கோட் தொழிற்சாலையின் முகாமையாளர் பிரியந்த குமாரவின் உடலுக்கு தீ வைத்ததாக பொலிஸாரால் கைது செய்யப்பட்ட கொலைக்கும்பலின் தலைவரான முகமது கலாம் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
நான் ஆட்களை ஒன்றுதிரட்டி முகாமையாளரின் உடலுக்கு எண்ணெய் ஊற்றி “அல்லா ஹூ அக்பர்” என்று கூறி கொளுத்தினோம் எனவும் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளரொருவர் தடுத்தும் இந்த வாக்குமூலத்தை அவர் வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்...
கொலை செய்யப்பட்ட இலங்கையருக்காக பாகிஸ்தான் மேற்கொண்டுள்ள நடவடிக்கை
பிரியந்தவின் சடலம் சற்றுமுன்னர் மண்ணில் புதைக்கப்பட்டது





கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
