நெக்டா நிறுவன ஊழியர் மீது தாக்குதல்
முல்லைத்தீவு - கரைத்துறைப்பற்று பிரதேசத்தில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட இருவரை தடுக்க முற்பட்ட நெக்டா நிறுவன ஊழியர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த தாக்குதல் சம்பவம் இன்றைய தினம் (29.02.2024) காலை இடம்பெற்றுள்ளது.
இலங்கை கடற்றொழில் அமைச்சின் கீழ் நன்னீர் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல் வளத்தை பாதுகாக்கும் நோக்கில் நெக்டா நிறுவனம் செயற்பட்டு வருகின்றது.

மருத்துவமனையில் அனுமதி
முள்ளியவளை முறிப்பு குளத்தில் தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளை பயன்படுத்தி கடற்றொழிலில் இரண்டு கடற்றொழிலாளர்கள் இன்று ஈடுபட்டுள்ளதை நெக்டா நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் அவதானித்துள்ளார்.
அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க முற்பட்டவேளை, நெக்டா நிறுவன ஊழியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதன்போது, காயமடைந்த நெக்டா நிறுவன ஊழியர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
you may like this,
சாந்தனுக்கு வஞ்சம் தீர்த்த காலம்! கட்டியணைத்து கதற காத்திருக்கும் தாய் - சதியால் திசைமாறிய பாசப்போராட்டம்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
ராஷ்மிகா திருமணத்திற்கு யாரெல்லாம் வராங்க தெரியுமா! கெஸ்டுக்கு போடப்பட்ட முக்கிய கண்டிஷன் Cineulagam
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan