விசேட வைத்திய நிபுணர்கள் கட்டணங்களில் ஏற்பட்டுள்ள பாரிய அதிகரிப்பு! வைத்திய நிபுணர் முன்வைக்கும் குற்றச்சாட்டு
தனியார் வைத்தியசாலைகளில் விசேட வைத்திய நிபுணர்களின் கட்டணங்கள் பாரிய அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் (FMOCT) தலைவர் வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ (Dr. Chamal Sanjeewa) தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்த கருத்துக்கள் தற்போது தனியார் துறைக்குச் சொந்தமான பல வைத்தியசாலைகளில் விசேட வைத்திய நிபுணர்களின் கட்டணம் 6000 ரூபா எல்லையையும் தாண்டியுள்ள ஒரு சூழ்நிலையில், சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்வதற்காக வரும் சாதாரண பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் பாரபட்சமான நடவடிக்கை.. வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர் குற்றச்சாட்டு
அதிகரிப்புக்கான காரணங்கள்
தொழில்வல்லுநர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரிச்சுமை, நேரடி மற்றும் மறைமுக வரிகள், தனியார் வைத்தியசாலை சேவைகளுக்கு அறவிடப்படும் வரிகள், அதிகரித்துள்ள மின்சாரக் கட்டணம், எரிபொருள் விலை உள்ளிட்ட பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையேற்றம் என்பன விசேட வைத்திய நிபுணர்களின் கட்டணங்கள் உயர்வதற்கு காரணமாக அமைந்துள்ளன.
இவ்வாறான நிலைமை காரணமாக, அரசாங்க வைத்தியசாலைகளில் சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் தனியார் வைத்தியசாலைகளுக்கு வரும் கிராமப்புற மற்றும் நடுத்தர நகர மக்கள், கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இதற்கு மேலதிகமாக, தனியார் துறை வைத்தியசாலைகளில், உள்நோயாளர் சிகிச்சை கட்டணங்கள் , மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் அல்லது அறுவை சிகிச்சை உபகரணங்களுக்கான கட்டணங்கள் என்பன பாரியளவில் உயர்த்தப்பட்டுள்ளமையானது, சுகாதாரக் காப்புறுதி (Health Insurance) வசதிகள் இல்லாத பொதுமக்களுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது.
தனியார் துறையின் மருத்துவ சேவைகளை ஒழுங்குபடுத்துவது சுகாதார அமைச்சின் பொறுப்பாக இருந்தபோதிலும், தற்போது அந்த நிலைமையும் சுகாதார அமைச்சின் கட்டுப்பாட்டில் இருந்து கைநழுவிப் போயுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
அரசியல் பழிவாங்கலில் ஈடுபடும் அரசு விரைவில் வீட்டுக்கு விரட்டியடிக்கப்படும் - சாகர காரியவசம் எச்சரிக்கை
YOU MAY LIKE THIS VIDEO
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan