தலவாக்கலையில் அரச ஊழியர்கள் சேவை குறித்து முன்வைத்த கோரிக்கை
தலவாக்கலை பிரதேச செயலகத்தின் முன்னால் ஊழியர்கள் மற்றும் பிரதேசத்தில் இருந்து செயலகத்திற்கு வருகைதந்த பயனாளிகள் உட்பட்ட 200இற்கு அதிகமானவர்கள் அமைதி வழி போராட்டத்தில் ஈடுபபட்டுள்ளனர்.
பிரதேச செயலகத்தில் இடவசதி போதாத காரணத்தினால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊழியர்கள் தமக்கு மக்களுக்கு செய்ய வேண்டிய சேவைகளை முறையாக வழங்க முடியவில்லை என கோரியும் அரசாங்கம் உடனடியாக பிரதேச செயலகத்துக்கு தேவையான வளத்தினை ஏற்படுத்திக் கொடுக்குமாறு கோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேச செயலகம் இயங்கும் கட்டட தொகுதியில் நகர சபைக்கு சொந்தமான முன்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் பகுதியில் இடம்பெறுவதால் அதற்கு மாற்று வழி செய்து கட்டிடத்தை பிரதேச செயலகத்துக்கு வழங்குமாறு அறிவித்திருந்தனர்.
அத்தோடு குறித்த முன்பள்ளி நகர சபையின் கீழ் உள்ள கட்டிடத்தில் இயங்குவதால் உடனடியாக முன்பள்ளி நிர்வாகம் கட்டிடத்தை நகர சபைக்கு வழங்குமாறு அறிவித்ததோடு கட்டிடத்துக்கும் சீல் வைக்கப்பட்டன.
இந்நிலையில் நேற்று முன்தினம் முன் பள்ளி நிர்வாகம் மூடப்பட்டிருந்த கட்டிடத்தினை உடைத்துக் கொண்டு முன்பள்ளி பாடசாலையை நடத்துவதற்கு முயற்சி செய்துள்ளனர்.
இதனை அடுத்து தமக்கு வழங்க வேண்டிய இடத்தினை அரசாங்கம் உடனடியாக பெற்றுத் தருமாறு கோரியே நேற்று காலை முதல் பிரதேச செயலகத்தின் ஊழியர்கள் கவன ஈர்ப்பில் ஈடுபட்டனர். இதன் போது பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளையும் முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க கப்பல்களை அருகே சென்று படம்பிடித்த ட்ரோன்கள் - ஈரான் முற்றுகையில் நடக்கும் அதிசயங்கள் News Lankasri
போலீஸில் தப்பித்த ஜனனியால் கலெக்டருக்கு ஏற்பட்ட சிக்கல், குணசேகரன் அடுத்த பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam