பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! இன்று நள்ளிரவுடன் இடைநிறுத்தப்படும் பேருந்து சேவை
நாளைய தினம் நடைபெறவுள்ள நாடு தழுவிய ஹர்த்தால் போராட்டத்தில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக அகில இலங்கை போக்குவரத்து ஊழியர் சங்கம் கோரியுள்ளது.
மக்கள் அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் ஹர்த்தாலில் அனைத்து ஊழியர்களும் பங்கேற்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் சங்கப் பொதுச் செயலாளர் சேபால லியனகே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் மற்றும் தொழிலாளர் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
முதலாம் இணைப்பு
பேருந்துகள் இயக்குவதை இன்று நள்ளிரவு முதல் நடைமுறையாகும் வகையில் இடைநிறுத்தவுள்ளதாக இலங்கையில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த பணிப்புறக்கணிப்பானது இன்று நள்ளிரவு முதல் நாளைய தினம் நள்ளிரவு வரை நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் பதவி விலகக் கோரி நாளை நடைபெறவுள்ள 24 மணித்தியால ஹர்த்தாலுக்கு இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக, தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் இணை அழைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
இவ்வாறாதொரு சூழலில் குறித்த ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதம செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்று நள்ளிரவு முதல் பேருந்துகளை இயக்குவதில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்னவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், நாளை மட்டுமல்ல எரிபொருள் இல்லாமல் பேருந்துகளை இயக்க முடியாது என்பதால் அடுத்த சில நாட்களிலும் பேருந்துகள் சேவையில் ஈடுபடாமல் இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி...
உரிய பதிலை வழங்க தவறினால் முழு நாடும் ஸ்தம்பிக்கும் - அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பதினாறாவது மே பதினெட்டு 5 மணி நேரம் முன்

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
