தேர்தல் தினத்தன்று தனியார் பேருந்துகள் மட்டுப்படுத்தப்பட வாய்ப்பு
எதிர்வரும் 21ஆம் திகதி கணிசமான எண்ணிக்கையிலான பேருந்து ஊழியர்கள் தமது வாக்குகளை அடையாளப்படுத்தும் நோக்கில் விடுமுறை எடுக்க உள்ளதனால் அன்றைய தினம் பேருந்துப் பயணத்தில் இடையூறுகள் ஏற்படக்கூடும் என இலங்கை தனியார் பயணிகள் போக்குவரத்து ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கிராமங்களுக்குச் செல்லும் மக்களுக்கு சேவைகளை வழங்குவதற்காக எதிர்வரும் 20ஆம் திகதி நள்ளிரவு வரை தொடர்ச்சியாக சேவைகள் வழங்கப்படவுள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் குமாரதாச குளியாப்பிட்டிய குறிப்பிட்டுள்ளார்.
வாக்களிப்பு
மேலும், பேருந்து ஊழியர்களில் எண்பது சதவீதத்திற்கும் அதிகமானோர் பிற பகுதிகளில் வசிப்பவர்கள் என்றும், இதனால் தொழிலாளர்கள் வாக்களிக்கச் செல்வதால் வரும் 21ஆம் திகதி பேருந்து சேவை 15 - 20 சதவீதமாக மட்டுப்படுத்தப்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, 2010ஆம் ஆண்டு முதல் பேருந்து சேவைகள் அத்தியாவசிய சேவையாக இருப்பதால் பேருந்து ஊழியர்களுக்கு தபால் மூல வாக்களிக்கும் உரிமையை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், அத்தகைய திட்டம் செயற்படுத்தப்படாததால், போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், வாக்குப்பதிவு நாளில், தங்கள் கிராமங்களுக்கு சென்று வாக்களிக்க வேண்டியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan
அமெரிக்க தாக்குதலில் 14 பேர் உயிரிழப்பு - மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் சரமாரி தாக்குதல் News Lankasri