தனியார் பேருந்து சேவையை முன்னெடுப்பது தொடர்பில் வெளியான தகவல்
தனியார் பேருந்து சேவையை முன்னெடுப்பது தொடர்பில் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கருத்து வெளியிட்டுள்ளார்.
அதன்படி தனியார் பேருந்துகளுக்கான எரிபொருள் கிரமமான முறையில் கிடைக்கப் பெற்றால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தேவையான அளவு பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இன்றைய தினம் 2 எரிபொருள் தாங்கிய கப்பல்கள் நாட்டிற்கு வருவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
நாளையதினம் அதனை தரையிறக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
முறையான முறையில் எரிபொருள் விநியோகம் இடம்பெறுமானால் மாத்திரம், குறிப்பாக எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பயணிகளுக்கு ஏற்றவகையில் எங்களால் சீரான போக்குவரத்து வசதியை வழங்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வரவுள்ள கப்பல்கள்
எரிபொருளை ஏற்றிய மூன்று கப்பல்கள் இலங்கையை வந்தடையவுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
தலா 40000 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிய இரண்டு கப்பல்கள் மற்றும் 41000 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிய மற்றுமொரு கப்பலும் இலங்கையை வந்தடையவுள்ளதாக தெரியவருகிறது.