இலங்கை வரும் எரிபொருளை ஏற்றிய மூன்று கப்பல்கள்
எரிபொருளை ஏற்றிய மூன்று கப்பல்கள் நாளை மறுதினம் இலங்கையை வந்தடையவுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
தலா 40 ஆயிரம் மெற்றிக் தொன் டீசலை ஏற்றிய இரண்டு கப்பல்கள் மற்றும் 41 ஆயிரம் மெற்றி தொன் டீசலை ஏற்றிய மற்றுமொரு கப்பலும் இலங்கையை வந்தடையவுள்ளன.
மேலும் 35 ஆயிரம் மெற்றிக் தொன் 95 ஒக்டேன் ரக பெட்ரோலை ஏற்றிய கப்பலம் நாளைய மறுதினம் இலங்கை வரவுள்ளது. இதற்கு 30 வீதமான பணம் செலுத்தப்பட்டுள்ளதுடன் மீதமுள்ள பணத்தை செலுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனிடையே 35 ஆயிரம் மெற்றிக் தொன் 92 ஒக்டேன் ரக பெட்ரோலை ஏற்றிய கப்பல் எதிர்வரும் 22 ஆம் திகதி அல்லது 23 ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளது.
இந்த பெட்ரோலுக்கான முழு பணமும் செலுத்தப்பட்டு விட்டது. மேலும் 31 ஆயிரத்து 500 மெற்றிக் தொன் கழிவு எண்ணெயை ஏற்றிய கப்பல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரவுள்ளது.
அதற்கு செலுத்த வேண்டிய பணம் தயார்ப்படுத்தப்பட்டு வருகிறது. இதனடிப்படையில், அடுத்த வாரத்தில் ஒரு லட்சத்து 24 ஆயிரம் மெற்றிக் தொன் டீசலும் 70 ஆயிரம் மெற்றிக் தொன் பெட்ரோலும் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் கையிருப்பில் இருக்கும்.
இதனை தவிர சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் தயாரிப்பு பணிகளுக்கு தேவையான 90 ஆயிரம் மெற்றிக் தொன் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.