யாழில் தனியார் பேருந்து சாரதி மீது வாள்வெட்டு தாக்குதல்
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் தனியார் பேருந்து சாரதி மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவமானது யாழ். பருத்தித்துறை பகுதியிலுள்ள பேருந்து நிலையத்தில் இன்று (10.01.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
முகமூடி அணிந்து உந்துருளியில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பருத்தித்துறையிலிருந்து கட்டைக்காடு நோக்கிச்சென்ற தனியார் பேருந்தின் உரிமையாளரும் சாரதியுமான தேவகுமார்
என்பவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்தவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam
