ஹட்டன் வீதியில் ஏற்பட்ட கோர விபத்து... பாடசாலை மாணவன் உட்பட அறுவர் தீவிர சிகிச்சையில்!
ஹட்டன் (Hatton) - மஸ்கெலியா பிரதான வீதியில் டிக்கோயா நகருக்கு அருகில், அதிவேகத்தில் பயணித்த முச்சக்கர வண்டியொன்று தனியார் பேருந்துடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று (16.04.2025) இரவு நடந்துள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள், டிக்கோயா ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், படுகாயமடைந்த மூன்று பேர் கண்டி போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேருந்துடன் மோதிய முச்சக்கரவண்டி
இந்த சம்பவத்தில் காயமடைந்த ஒரு பாடசாலை மாணவன் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் பொலிஸார் தகவல் வழங்கியுள்ளனர்.
விபத்திற்குள்ளான ஹட்டனில் இருந்து ஹட்டன் - லெட்டண்டி தோட்டத்திற்கு பயணித்த முச்சக்கர வண்டியின் சாரதி அதிக அளவில் மதுபோதையில் இருந்துள்ளார்.
இந்நிலையில், மஸ்கெலியாவிலிருந்து ஹட்டன் நோக்கி எதிர் திசையில் பயணித்த தனியார் பேருந்து, 13 வயது பாடசாலை மாணவன் உட்பட நான்கு பேரை ஏற்றிக்கொண்டு, அதிவேகமாகச் சென்ற முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
மேலும், தனியார் பேருந்து ஓட்டுநர் ஹட்டன் பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
