முந்தைய அரசியல்வாதிகளின் முகவரியாக மாறியுள்ள சிறைச்சாலைகள்..அமைச்சர் சந்திரசேகரன்!
இந்த நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்ற முந்தைய அரசியல்வாதிகளினுடைய முகவரியாக தற்போது சிறைச்சாலைகள் மாற்றப்பட்டுள்ளன என்று நாடாளுமன்ற உறுப்பினரும் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி - இரணைமடு சந்திக்கு அண்மித்த பகுதியில் அமைந்துள்ள நெலும்பியச மண்டபத்தில் இன்று (22.06.2025) காலை 9 மணிக்கு வடமாகானத்தைச் சேர்ந்த சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 300 மாணவர்களுக்கு ஜனாதிபதி செயலகத்தினால் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
வங்குரோத்து நிலை
இதன்போது அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், "இந்த நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்களை கடந்த காலங்களில் இவ்வாறான சலுகைகளை அவர்களும் அவர்களது குடும்பங்களுமே பெற்றிருந்தார்கள்.
பின்தங்கிய மாணவர்களுக்கு இவ்வாறான சலுகைகள் கிடைக்கப்பெறவில்லை. இந்த நாட்டை அவர்கள் ஊழல் செய்து கீழ் நிலைக்கு கொண்டு சென்றார்கள். இவ்வாறான ஆட்சியாளர்கள் இந்த நாட்டை கொள்ளையடித்த ஆட்சியாளர்கள் சிறைக்கு செல்கின்றனர்.
இவர்களது முகவரிகள் இன்று சிறைச்சாலைகளாகவே காணப்படுகின்றன" என கூறியுள்ளார்.
இந்த நிகழ்வில், கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










ஈஸ்வரி குறித்து கொற்றவையிடம் தர்ஷினி கூறிய உண்மை, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

சரியான சாப்பாடு இல்லாமல் கிழிந்த உடையுடன்.., மாணவர்கள் முன்பு கிரிக்கெட் வீரர் நடராஜன் எமோஷனல் News Lankasri

கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri
