ஐரோப்பிய ஒன்றியத்திடம் முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து கைதிகள் ஆர்ப்பாட்டம்

Srilanka European union Duminda Silva Gotapaya Welikada Prison
By Dhayani Oct 13, 2021 04:12 PM GMT
Report

கைதிகளின் மனித உரிமைகளைப் பாதுகாக்க ஐரோப்பிய நாடாளுமன்றம் தலையிடக்கோரி வெலிக்கடை சிறைச்சாலையின் கூரையின் மீதேறி கைதிகள் குழு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

ஆயுள் தண்டனை அனுபவித்து தம்மை விடுவிக்கக்கோரி ஒக்டோபர் 12ஆம் திகதியான நேற்று கைதிகள் குழு நடத்திய போராட்டம் 22 நாட்கள் கடந்துவிட்டதாக கைதிகளின் உரிமைகளுக்காக செயற்படும் குழு தெரிவித்துள்ளது.

இந்த வருடம் நவம்பரில் ஐரோப்பிய ஒன்றியம் அதன் ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை மீள்பரிசீலனை செய்வதால், ஸ்ரீலங்காவின் மனித உரிமைகள் பதிவை ஆய்வு செய்த பின்னர், கைதிகளின் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் விடயத்தில் ஐரோப்பிய நாடாளுமன்றம் தலையிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

"ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு, கைதிகளின் மனித உரிமைகளைப் பாதுகாக்க உடனடியாகத் தலையிடவும்" என போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகள் வைத்திருந்த வெள்ளை நிற பதாகையில் எழுதப்பட்டிருந்தது.

பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பல இளைஞர்களை விடுவித்ததாக ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபைக்கு அறிவித்த மறுநாளான செப்டம்பர் 20ஆம் திகதி, வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

கைதிகளின் கோரிக்கைகளுக்கு சாதகமாக பதிலளிக்க இயலாது எனக் கூறும் சிறைச்சாலைகள் திணைக்களம், கடந்த மாதம் சட்டமா அதிபர் மற்றும் நீதி அமைச்சிற்கு கைதிகளின் கோரிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களுக்கு அறிவித்துள்ளது.

இதன் முன்னேற்றம் குறித்து இதுவரை எவ்வித கருத்தையும் சம்பந்தப்பட்ட தரப்பு வெளியிடவில்லை. கைதிகள் தினத்தையொட்டி சிறிய குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்ட 89 கைதிகள் அண்மையில் ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டனர்.

மரண தண்டனை விதிக்கப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவிக்கும் சுமார் 1,500 கைதிகள் வெலிக்கடை செப்பல் வார்டில் அடைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவரது தொழிற்சங்க ஆலோசகரான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவை கொலை செய்த குற்றவாளி மற்றும் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேற்பார்வை நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மன்னிப்பு வழங்கினார்.

துமிந்த சில்வா ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டபோது கூட, வெலிக்கடை மற்றும் மஹர உட்பட பல சிறைகளில் உள்ள கைதிகள் குழு அவர்களை விடுவிக்கக் கோரி போராட்டங்களை நடத்தியது.

விடுதலைக்குத் தகுதியான குழுவால் இந்த போராட்டம் நடத்தப்படுவதாக, கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் பொதுச் செயலாளர் சுதேஷ் நந்திமால் சில்வா, ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

எனினும், அரசாங்கத்திற்கு ஆதரவானவர்கள் மாத்திரமே விடுதலை செய்யப்படுவதாக குற்றம் சாட்டினார். "எதிர்காலத்தில் அவர்கள் சொக்கா மல்லியையும் துமிந்த சில்வாவையைப் போல் விடுவிப்பார்கள் என நாங்கள் நம்புகிறோம். ஆனால் அவர்கள் அல்ல விடுவிக்கப்பட வேண்டியவர்கள். துமிந்த சில்வா போன்றவர்கள் சிறையில் ஐந்து வருடங்களே இருந்தனர்.

ஆனால் 20 வருடங்களுக்கு மேல் இந்த சிறையில் பலர் இன்னும் கஷ்டப்படுகிறார்கள் . " வயதான கைதிகள் மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட கைதிகள் நீண்ட காலமாக சிறைச்சாலையில் அவதிப்பட்டு வருவதாக நந்திமால் கூறியுள்ளார்.

இந்த கைதிகளை சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தின் கீழ் விடுவிப்பதற்கு பதிலாக, கைதிகள் சித்திரவதை செய்யப்படுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செப்டம்பர் 19ஆம் திகதி ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடாரெஸை சந்தித்தபோது, சட்ட செயல்முறை முடிந்தவுடன் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க தயங்க மாட்டேன் என்று கூறியிருந்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 12 ஆண்டுகளுக்கும் மேலாக குற்றச்சாட்டு இல்லாமல் சிறையில் இருந்த தமிழ் இளைஞர் கதிர்வேலு கபிலன் அண்மையில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அமுல்படுத்துவது உள்ளிட்ட ஸ்ரீலங்கா அரசின் மனித உரிமைப் பதிவுகளை விசாரணை செய்வதற்காக வருகைந்தந்த ஐரோப்பிய ஒன்றிய குழு இம்மாதம் 5ஆம் திகதி இலங்கையை விட்டு வெளியேறியது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் விதிகளைத் திருத்துவதற்கு உடனடி நடவடிக்கைகளை எடுப்பதாக, ஒக்டோபர் 4 திங்கட்கிழமை காலை மிரிஹானவில் உள்ள தனது இல்லத்தில் ஐரோப்பிய ஒன்றியக் குழுவினரை சந்தித்த ஜனாதிபதி கூறியிருந்தார்.

கடந்த ஜூன் மாதம் பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சிறுபான்மையினரை ஒடுக்குவதற்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவது குறித்து கவனத் செலுத்தியிருந்தது. எவ்வாறெனினும், ஐரோப்பிய ஒன்றியம் கைதிகளை சந்தித்ததா என்பது தொடர்பில் எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.

இலங்கை தனது ஒப்புக்கொள்ளப்பட்ட மனித உரிமைக் கடமைகளை நிறைவேற்றவில்லை என்பது நிரூபிக்கப்பட்டால், தற்போதுள்ள ஜிஎஸ்பி பிளஸ் சலுகை அல்லது முன்னுரிமை வரி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சலுகை நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஜிஎஸ்பி பிளஸ் சலுகை மீள்பரிசீலனை செய்யப்படும் இந்த வருட நவம்பரில் ஸ்ரீலங்காவின் மனித உரிமைகள் பதிவை ஐரோப்பிய ஒன்றியம் மீள்பரிசீலனை செய்யும், மேலும் சிறுபான்மையினர் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாப்பு உட்பட சர்வதேச மனித உரிமை கடமைகளை செயல்படுத்துவது தொடர்பில் கரிசனை கொள்ளும்.

மனித மற்றும் தொழிலாளர் உரிமைகள், சுற்றுச்சூழல் மற்றும் நல்லாட்சி ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கான சர்வதேச சாசனங்கள் மஹிந்த ராஜபக்ச நிர்வாகத்தால் செயல்படுத்தப்படாததால் கடந்த 2010 இல் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலகை இடைநிறுத்தப்பட்டது.

எவ்வாறெனினும், மனித உரிமைகள் தொடர்பான 27 சர்வதேச ஒப்பந்தங்களை ஸ்ரீலங்கா நடைமுறைப்படுத்துமென நல்லாட்சி அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய, மே 2017இல் இந்த சலுகை மீண்டும் கிடைக்கப்பெற்றது.  

மரண அறிவித்தல்

மயிலிட்டி, London, United Kingdom

24 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US