உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக தமிழ் அரசியல் கைதிகள் கூறவில்லை! - நீதி அமைச்சர்
அனுராதபுரம் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவிக்கவில்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
"அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் கைதிகளுக்கு, இராஜாங்க அமைச்சர் மூலமாக இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை நடத்தி உரிய அதிகாரிகளுக்கு வழங்குவதே எமது அமைச்சின் மூலமாக முன்னெடுக்கும் வேலைத்திட்டமாகும்.
குற்றம் தொடர்பில் பொலிஸார் வேறு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் இன்றும் என்னுடன் இந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தார்.
ஆகவே இந்த விடயத்தில் நான் தலையிட நினைக்கவில்லை, அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று குறித்த கைதிகளுடன் நான் கலந்துரையாடினேன். அதன்போது தாம் யாழ்ப்பணத்திற்கு செல்ல வேண்டும் என அவர்கள் என்னிடம் கூறினார்கள்.
ஆனால் அவர்களின் கிராமங்கள் அண்மையில் உள்ள காரணத்தினால் நாங்கள் அங்கு செல்ல விரும்புகின்றோம், எமது உறவினர்களுடன் கதைக்க அவர்களை சந்திக்க எமக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற காரணத்தையே அவர்கள் என்னிடம் கூறினர்.
எனினும், உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக அவர்கள் என்னிடம் கூறவில்லை. நான் மீண்டும் மீண்டும் தமிழ் மொழியில் அவர்களுடன் கலந்துரையாடினேன். எனினும் உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக அவர்கள் என்னிடம் கூறவில்லை.
எவ்வாறாயினும், அவர்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதிப்படுத்த நாம் தயாராக உள்ளோம்., உயர் நீதிமன்றமும் அதனையே சுட்டிக்காட்டியுள்ளது. அரச பாதுகாப்பில் அவர்கள் உள்ளனர், ஆகவே அவர்களுக்கு ஏதேனும் நடந்தால் அரசாங்கமாக நாம் சகலரும் பொறுப்புக்கூற வேண்டும்.
எவ்வாறு இருப்பினும் யாழ்ப்பாணத்திற்கு மாற்றுவதென்றால் பாதுகாப்பு தரப்புடன் கலந்துரையாட வேண்டும், அவர்களை கொழும்பு அல்லது தும்பர சிறைக்கு மாற்ற விருப்பம் கேட்டேன், ஆனால் அவர்கள் அதற்கு விரும்பவில்லை" என தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 15 மணி நேரம் முன்

பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை, ரூட்டை மாற்றிய பிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணன்... வைரலாகும் வீடியோ Cineulagam

மணிமேகலையை தாக்கி தான் ரக்ஷன் இப்படி பேசினாரா.. குக் வித் கோமாளி 6ல் என்ன கூறினார் பாருங்க Cineulagam
