பாலஸ்தீனர்கள் அனைவரையும் விடுவிக்கவும்: இஸ்ரேலுக்கு ஹமாஸ் விதித்துள்ள நிபந்தனை
இஸ்ரேலிய சிறையில் வாடும் பாலஸ்தீன கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என இஸ்ரேலுக்கு ஹமாஸ் அமைப்பினர் நிபந்தனை விதித்துள்ளனர்.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை 23வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த போர் நடவடிக்கையில் ஹமாஸ் அமைப்பினரை ஒட்டுமொத்தமாக அழிக்கும் நோக்கிலும், ஹமாஸ் படையினர் கட்டுப்பாட்டில் இருக்கும் பிணைக் கைதிகளை விடுவிக்கும் நோக்கிலும் இஸ்ரேலிய இராணுவ படை காசாவில் தரைவழி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
உலக நாடுகள் வலியுறுத்து
இதன்படி இஸ்ரேலிய இராணுவ படையின் இந்த தாக்குதலில் பாலஸ்தீன மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஐ.நா மற்றும் உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

எனினும், ஹமாஸ் அமைப்பை முழுவதும் ஒழிக்கும் வரை இந்த போர் தாக்குதலை நிறுத்த மாட்டோம் என என இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இந்நிலையில் தங்களிடம் உள்ள பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றால் இஸ்ரேல் சிறையில் வாடும் பாலஸ்தீன கைதிகளை உடனடியாக இஸ்ரேல் விடுவிக்க வேண்டும் என ஹமாஸ் அமைப்பினர் நிபந்தனை விதித்துள்ளனர்.
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri