இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்
சட்டவிரோதமாக இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு விசா வழங்குவதற்கு அனுமதி இல்லை என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஆதரவளிக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய கிழக்கில் மோதல்களுக்கு மத்தியில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கும் போதே அமைச்சர் மனுஷ நாணயக்கார மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இலங்கையர்களுக்கு விசா
இந்நிலையில், காலாவதியான விசாவுடன் இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு விசா வழங்க இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தீர்மானித்துள்ளது.
இதன்படி இஸ்ரேல் குடிவரவுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எயால் சிஸ்ஸோ உள்ளிட்ட மூன்று சிரேஷ்ட அதிகாரிகள் இலங்கைத் தூதரகத்திற்கு விஜயம் செய்து, வீட்டுப் பணிப்பெண்கள் மற்றும் விசா இல்லாத ஏனைய இலங்கையர்களுக்கும் விசா வழங்குமாறு குடிவரவுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்ததாக தூதுவர் நிமல் பண்டார கூறியுள்ளார்.
[TPW6DUU ]