தேசிய பாதுகாப்பிற்கு அளிக்கப்படும் முன்னுரிமை தொடர்ந்து வழங்கப்படும் - பசில் ராஜபக்ஷ (Video)
தேசிய பாதுகாப்பிற்கு அளிக்கப்படும் முன்னுரிமை தொடர்ந்து வழங்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ (Basil Rajapaksa) தெரிவித்துள்ளார்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்ட நாடாளுமன்ற அதிகாரம் தமது அரசாங்கத்திற்கு காணப்படுவதாகவும், அதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) தலைமை தாங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசின் எதிர்வரும் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவினால் இன்று சமர்பிக்கப்பட்டது.
இலங்கையின் 76 ஆவது வரவுசெலவுத்திட்டத்தை நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ நிதியமைச்சர் என்ற வகையில் சமர்ப்பித்து உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
இன்று சமர்ப்பிக்கப்படும் வரவுசெலவுத் திட்டம் இலங்கையின் ஏழாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) தலைமையிலான அரசாங்கத்தின் இரண்டாவது வரவுசெலவுத் திட்டமாகும்.
500 பில்லியனுக்கும் அதிகமான பில்லியன் ரூபா வருமானம் இழந்த நாடாக இலங்கை காணப்படுகிறது, எவ்வாறெனினும், மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ளும் நாடாக இலங்கை மாறியுள்ளது.
வாழ்வாதார விலைவாசி அதிகரிப்பு சவால்களுக்கு நிலையான தீர்வை பெற்றுகொடுக்க எந்த அரசாங்கத்திற்கும் முடியாமல் போனமையே உண்மையான விடயம்.
வியாபார மாபியா மற்றும் சர்வதேச அழுத்தங்களை ஏற்படுத்தும் தரகர்கள் சமூகத்தில் கலந்துள்ளார்கள், இது குறித்து சகலரும் அவதானமாக இருக்க வேண்டும்.
சர்வதேச போதைப்பொருள் மாபியாக்குள் இலங்கையை சிக்கவைக்கும் முயற்சி இன்றும் பலமாக முன்னெடுக்கப்படுகிறது, இளைஞர்களே இதற்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளார்கள்.
ஆசிய வலயத்தின் ஏனைய நாடுகளை விடவும் இலங்கையால் விரைவாக மீட்சி காண முடியும்.
இதேவேளை, தற்போதுள்ள அலுவலக கட்டிடங்கள் தவிர, புதிய அலுவலக கட்டிடங்களை நிர்மாணிப்பது இரண்டு வருடங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
2018 ஏப்ரல் - 2019 ஜூலை மாதம் வரையில் 15 மாதங்களில் 6.9 பில்லியன் டொலர்களை செலுத்த வேண்டிய பாரிய சுமை அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ளது.
வரவு - செலவுத்திட்டத்தின் அதிக செலவு - கடன்களுக்கான வட்டியை செலுத்தவே ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri