புத்தசாசன அமைச்சின் முன்னாள் செயலாளருக்கு பிணை
புதிய இணைப்பு
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் முன்னாள் செயலாளர் எம்.கே.பி. திசாநாயக்க பிணையில் செல்ல கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, சந்தேகநபருக்கு தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் , வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
முதலாம் இணைப்பு
புத்தசாசன அமைச்சின் முன்னாள் செயலாளரான கமல் பண்டார திஸாநாயக்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தக வெளியீட்டின்போது உரிய கொள்முதல் நடைமுறைகளை மீறி, அரசுக்கு 4.79 மில்லியன் ரூபாய் நிதி இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் முன்னிலை
சந்தேகநபர் தனக்கு நெருக்கமான நிறுவனமொன்றிடம் மூன்று சந்தர்ப்பங்களில் 4,790,000 ரூபாய் தொகையில் புத்தகங்களை அச்சிடுவதற்காக கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த புத்தக தொகுதியை களஞ்சியசாலைக்கு பெற்றுக்கொள்ளாமலேயே அதற்கான கொடுப்பனவுகளை செலுத்தி அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியமை மற்றும் தனக்கு நெருக்கமான நிறுவனத்திற்கு அதிக இலாபத்தை அளித்ததன் மூலம் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட முன்னாள் செயலாளர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளார்.
இலங்கையில் வாகனம் வாங்க காத்திருப்போருக்கு சாதகமான அறிவிப்பு - விலையில் இலட்சக்கணக்கில் ஏற்படும் மாற்றம்