உள்நாட்டு வர்த்தகர்களுக்கு விநியோகத்தில் முன்னுரிமை - தொழில்துறையை வலுப்படுத்த ஜனாதிபதி உறுதி

Anura Dissanayake Sri Lanka Income Tax Department Iran-Israel War
By Rakesh Apr 09, 2026 07:17 AM GMT
Report

"உள்நாட்டுத்தொழில்துறையினரை வலுப்படுத்துவதே அரசின் பிரதான இலக்காகும். எதிர்காலத்தில் அரசுக்குத் தேவையான விநியோகங்களைப் பெற்றுக்கொள்ளும் போது, உள்நாட்டு வர்த்தகர்களுக்கு முன்னுரிமை மற்றும் விரிவான வாய்ப்புகள் வழங்கப்படும்" என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இலங்கை ஐக்கிய வியாபாரக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று புதன்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தீவிர எச்சரிக்கை நிலையில் வெப்பநிலை..! அவதானமாக இருக்கவும் - இலங்கை மக்களுக்கு அறிவுறுத்தல்

தீவிர எச்சரிக்கை நிலையில் வெப்பநிலை..! அவதானமாக இருக்கவும் - இலங்கை மக்களுக்கு அறிவுறுத்தல்

வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் நடைமுறை பிரச்சினை

மத்திய கிழக்கு போர்ச் சூழல் காரணமாக உள்நாட்டுத் தொழில்துறை எதிர்நோக்கியுள்ள சவால்கள் மற்றும் வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைப் பிரச்சினைகள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

உள்நாட்டு வர்த்தகர்களுக்கு விநியோகத்தில் முன்னுரிமை - தொழில்துறையை வலுப்படுத்த ஜனாதிபதி உறுதி | Priority In Delivery To Domestic Traders Anura

குறிப்பாக, செஸ் வரி, தொழில்துறையில் நிலவும் மனிதவளப் பற்றாக்குறை மற்றும் சட்டவிரோதமான முறையில் பொருள்கள் நாட்டுக்குள் கொண்டுவரப்படுதல் ஆகிய விவகாரங்கள் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தினார்.

தரம் குறைந்த பொருள்கள் உள்நாட்டுச் சந்தைக்கு வருவதைத் தடுப்பதற்கும், அது சார்ந்த சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இணைந்து துரித நடவடிக்கை எடுக்க இணக்கம் காணப்பட்டது.

கொள்கலன்களை விடுவிப்பதில் தாமதம்

அத்துடன், துறைமுகங்களில் கொள்கலன்களை விடுவிப்பதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும், இது தொடர்பாக துறைசார் அதிகாரிகளுடன் பேசுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் இலங்கை ஐக்கிய வியாபாரக் கூட்டமைப்பின் தலைவி டானியா எஸ். அபேசுந்தர உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அவசர அறிவுறுத்தல்

முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அவசர அறிவுறுத்தல்


GalleryGallery
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US