தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை! பிரதியமைச்சர் டீ.பி.சரத் பெருமிதம்
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் முதலாளித்துவம் தோற்கடிக்கப்பட்டு தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் டீ.பி. சரத் தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை பிரதேசத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ''தற்போதைக்கு விவசாயிகள் எதிர்கொண்ட பிரச்சினைகளை இந்த அரசாங்கம் தீர்த்து வைத்துள்ளது.
நெல் கொள்வனவு
விவசாயிகளிடம் இருந்துசுமார் இரண்டு இலட்சம் மெட்ரிக் தொன் நெல்லைக் கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
இன்னும் ஒருமாதத்திற்குள்ளாக விவசாயப் பெருமக்கள் உழவு இயந்திரத்தில் ஏற்றிக் கொண்டு ஆயிரக்கணக்கில் நெல் மூடைகளை எடுத்துக் கொண்டு நெல் சந்தைப்படுத்தல் சபையைத் தேடிவருவார்கள் என்ற நம்பிக்கை உண்டு.
ஏனெனில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் முதலாளித்துவம் தோற்கடிக்கப்பட்டு, தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதை தொழிலாளர் வர்க்கம் நன்றாகப் புரிந்து வைத்துள்ளது.” என்று பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.