வரலாற்றுத் திருப்புமுனையான வரவு செலவுத்திட்டம்! வித்தியாரத்ன நம்பிக்கை
இம்முறை வரவு செலவுத்திட்டம் வரலாற்றுத் திருப்புமுனையான ஒரு வரவு செலவுத்திட்டமாக அமையும் என்று அமைச்சர் சமந்த வித்தியாரத்ன நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நேற்று (16) பதுளையில் நடைபெற்ற பொதுமக்கள் சந்திப்பு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
வரவு செலவுத்திட்டம்
இலங்கை வரலாற்றில் முதல்தடவையாக இந்த வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக அரசியல்வாதிகளுக்கான செலவினங்கள் குறைக்கப்பட்டு, அது பொதுமக்கள் நன்மைக்காக செலவிடப்படவுள்ளது.
அத்துடன் முன்னைய அரசாங்கங்கள் போலன்றி இம்முறை அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படவுள்ளதுடன், அதனை அடிப்படை சம்பளத்தில் சேர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அரச ஊழியர்களுக்கு மிகச் சிறந்த சம்பள அதிகரிப்பும் வழங்கப்படும். இவ்வாறாக இம்முறை வரவு செலவுத்திட்டம் ஒரு வரலாற்றுத் திருப்புமுனையான வரவு செலவுத்திட்டமாக அமையும்" என்றார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் வழுக்கி விழுந்த தமிழ், பதறி அடித்து ஓடிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam
