மட்டக்களப்பில் பொதுமக்களுக்கு முன்னுரிமை வழங்கி எரிபொருள் விநியோகம்(Photo)
முழு இலங்கையிலும் அத்தியாவசிய சேவைக்கு மாத்திரம் எரிபொருள் வழங்கப்பட்டுவரும் நிலையில் மட்டக்களப்பு நகரில் உள்ள ஐ.ஓ.சி ஊடாக பொதுமக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இன்று(03) எரிபொருள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெட்ரோலை கொள்வனவு செய்வதற்காக கடந்த 4 நாட்களாக இரவு பகலாக வாகனங்களுடன் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளனர்.
இதனையடுத்து இன்று அதிகாலை மட்டக்களப்பு நகரில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு 6600 லீட்டர் பெட்ரோல் கொண்டு வரப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு முன்னுரிமை


இந்நிலையில் மட்டக்களப்பு ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் பொதுமக்களுக்கு முன்னுரிமை வழங்கி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட 6600 லீட்டரில் அதிகளவிலான பெட்ரோலினை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளார்.
இந்த ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 92 ஒக்டேன் பெட்ரோலும், 95 ஒக்டேன் பெட்ரோலும் விநியோகிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விநியோகம்

அதேவேளை மதகுருமார்கள், எரிபொருள் இன்றி தமது சேவையை வழங்க முடியாதிருந்த மட்டக்களப்பு மாநகர சபை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் அடங்கலாக 100 பேருக்கும், விவசாயிகள் 50 பேருக்கும் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

மேலும் மட்டக்களப்பு மாவட்ட திடீர் மரண
விசாரணை அதிகாரிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan