மட்டக்களப்பில் ஒரு வாரத்திற்கு பின் எரிபொருள் விநியோகம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு வாரத்திற்கு பின்னர் இன்றைய தினம் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் ஐஓசி ஊடாக நடைபெற்றுள்ளன.
மட்டக்களப்பு நகரில் உள்ள ஐஓசி ஊடாக இந்த விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி இன்றைய தினம் மட்டக்களப்பு மாநகரசபை ஊழியர்கள் மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகள், பொதுமக்கள் ஆகியோருக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
சிறிய குழப்ப நிலை
எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்ட வேளையில் சிறிய குழப்ப நிலை ஏற்பட்ட போதிலும் மட்டக்களப்பு ஐஓசி நிறுவனத்தின் தலைவர் மு.செல்வராஜாவின் வழிகாட்டலில் மட்டக்களப்பு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் முன்னெடுத்த ஒழுங்குபடுத்தல் நடவடிக்கையினால் சிறந்த முறையில் எரிபொருள் வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக முச்சக்கரவண்டி சாரதிகளும் சிறிய வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவோரும் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.










Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan