ஜனாதிபதி உரைக்கு முன்னதாக, சஜித்தின் முக்கிய கோரிக்கைகள்
முதலாவதாக எரிபொருள் பிரச்சினையை அடுத்து நாட்டு மக்கள் பாரிய பிரச்சினைக்கு முகம் கொடுத்து வருகின்றனர். ஜனாதிபதி இன்றைய தினம் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ள நிலையில் எரிபொருள் விலை குறித்து நாட்டு மக்களுக்கு நன்மையான செய்தி ஒன்றை வெளியிடுவார் என நாங்கள் நம்புகின்றோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அதேசமயம் கொழும்பு கடற்பரப்பில் தீக்கிரையான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் நாட்டுக்கும் மீனவ சமுதாயத்திற்கும் ஏற்பட்டுள்ள பாரிய பாதிப்புக்கள் குறித்தும் அதில் மீள்வது தொடர்பில் ஜனாதிபதி தெளிவுப்படுத்துவார் என நாங்கள் நம்புகின்றோம் எனவும் சஜித் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தினம் இரவு 8.30 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.
அதற்கு முன்னர் ஜனாதிபதியின் உரை எவ்வாறு அமையபோகும் என்பது தொடர்பிலும் தங்களது எதிர்பார்ப்புக்கள் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விபரித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,