உலக ஆசிரியர் தினமன்று போராட்டத்தில் ஈடுபடவுள்ள அதிபர்கள்
உலக ஆசிரியர் தினமான எதிர்வரும் 6ம் திகதி அதிபர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக ஆசிரியர் தினமன்று நாடு முழுவதிலும் அதிபர்கள் தங்களது வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை வெளியிட உள்ளனர்.
அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடு களையப்படாமையை கண்டித்து இந்தப் போராட்டம் நடாத்தப்பட உள்ளது என இலங்கை அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதிலும் சுமார் 11200 அதிபர்கள் சேவையாற்றி வருவதாகவும் அவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்பார்கள் எனவும் இலங்கை அதிபர் சங்கத்தின் செயலாளர் பியசிறி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சம்பள முரண்பாடுகளை களையுமாறு கோரி இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்க கூட்டணியால் இன்று கூட்டப்பட்ட ஊடக சந்திப்பில், கருத்துரைத்த ஆசிரியர் சேவை சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின்,
எந்த இடையூறாக இருந்தாலும் தமது தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளோம்.இந்த போராட்டங்கள், 312 மண்டல கல்வி அலுவலகங்களை அடிப்படையாகக் கொண்டவை..
ஆசிரியர்களின் முதன்மை வேதனத்தில் உள்ள முரண்பாடுகளுக்கு விரைவான தீர்வுகள் மற்றும் மாணவர்களின் கல்வி உரிமையைப் பாதுகாத்தல் என்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.
கடந்த 84 நாட்களாக பணி நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தாலும், தங்கள் பிரச்சனைகளுக்கு சரியான தீர்வை வழங்க, அரசாங்கம் தவறிவிட்டது.
பாடசாலைகளை திறப்பதற்கான திகதிகளை அதிகாரிகள் முன்மொழிகின்றனர். அத்துடன் ஆரம்ப பாடசாலைகளை திறப்பதற்கான திட்டங்கள் குறித்து கல்வி அமைச்சர் பேசுகின்றார்.
இருப்பினும், பாடசாலைகளில் பாடங்களை மீண்டும் தொடங்க ஆசிரியர்கள் தேவை என்றும் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை மீண்டும் பாடசாலைகளுக்கு அழைத்து வருவதற்கு, தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி தீர்வை வழங்க வேண்டும் என்றும் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டார்.





சேரன் எடுத்த திடீர் முடிவால் கண்ணீரில் சோழன், பாண்டியன், பல்லவன், நிலா... அய்யனார் துணை சோகமான புரொமோ Cineulagam

காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri

Bigg Boss 9: நாளை பிரம்மாண்டமாக ஆரம்பிக்கவுள்ள பிக் பாஸ் சீசன் 9: கசிந்தது போட்டியாளர்கள் விபரம்! Manithan

உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam

துபாயில் சிறையில் இருந்து விடுதலையான 19 வயது பிரித்தானிய இளைஞர்: லண்டன் சாலையில் சோகம் News Lankasri
