மீண்டும் போராட்டத்தில் ஈடுபடும் அதிபர்கள்!
பாடசாலை அதிபர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்றை நாளைய தினம் முன்னெடுக்க உள்ளதாக அதிபர் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
சம்பள முரண்பாடு குறித்த சுற்று நிருபத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவித்த போதிலும் உரிய பதில் எதுவும் கிடைக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.
அடையாள போராட்டத்திற்கு நாளை உரிய பதில் கிடைக்காவிட்டால், எதிர்வரும் 3ம் திகதி பாரிய போராட்டமொன்றை முன்னெடுக்க நேரிடும் என இலங்கை ஆசிரியர் ஒன்றியத்தின் செயலாளர் பியசிறி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பெரும் எண்ணிக்கையிலான அதிபர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஆசிரியர், அதிபர் சம்பள முரண்பாடு களைவது தொடர்பில் சரியான தீர்வுகள் இன்னும் கிடைக்கவில்லை என அதிபர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
