தனக்கு சார்பாக மாணவர்களிடமிருந்து கையொப்பம் திரட்டிய அதிபர்!
கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட உயர்தர பாடசாலை ஒன்றின் அதிபர் தனக்கு சார்பாக மாணவர்களிடமிருந்து கையொப்பங்களை பெற்றுள்ளமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படும் என கிளிநொச்சி வடக்கு வலயக் கல்வி பணிப்பாளர் சிவனருள் ராஜா தெரிவித்துள்ளார்.
ஆளுமையற்ற அதிபர்

கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட உயர்தர பாடசாலையொன்றின் ஆளுமையற்ற அதிபரை இடம் மாற்றுமாறு பெற்றோர்கள், பழைய மாணவர்கள், பொது அமைப்புகள் இணைந்து மாகாண கல்வி அமைச்சு, அரசியல் பிரதிநிதிகள் மற்றும் வலயக்கல்வி திணைக்களம் ஆகியவற்றுக்கு கடந்த வாரம் மனுக்களை வழங்கியிருந்தனர்.
கையொப்பம் திரட்டல்

இதனையடுத்து குறித்த பாடசாலை அதிபர் நேற்றைய தினம் (20-09-2022) பாடசாலையிலுள்ள தரம் 06 முதல் 12 வரையான மாணவர்களிடம் கையொப்பம் திரட்டியுள்ளார்.
இந்நிலையில் குறிப்பிட்ட சில மாணவர்கள் கையொப்பங்களை இட்டிருந்தாலும் அதிகளவான மாணவர்கள் இதனை எதிர்த்துள்ளதுடன் குறித்த விடயம் தொடர்பில் பெற்றோர்களிடம் முறையிட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் குறித்த அதிபரை தொடர்பு கொள்ள முற்பட்டபோதும் அவருடன் தொடர்பை ஏற்படுத்த முடியாது போயுள்ளது.
இதனையடுத்து அதிபர் தனக்கு சார்பாக
மாணவர்களிடமிருந்து கையொப்பங்களை பெற்றுள்ளமை தொடர்பில் விசாரணை
மேற்கொள்ளப்படும் என கிளிநொச்சி வடக்கு வலயக் கல்வி பணிப்பாளர்
தெரிவித்துள்ளார்.
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
ஆசிரியர் வேலையை உதறிவிட்டு சவப்பெட்டி தொழில்: ஆண்டுக்கு ரூ.54 கோடி வருமானம் ஈட்டும் 29 வயது பெண் News Lankasri