முக்கிய பொறுப்பில் இருந்து விலகினார் இளவரசர் ஹரி
முன்னாள் வேல்ஸ் இளவரசி டயானாவை கௌரவிக்கும் விதமாக, எச்.ஐ.வி., நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தொடங்கப்பட்ட அறக்கட்டளையின் பொறுப்பில் இருந்து இளவரசர் ஹரி விலகியது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானிய இளவரசர் ஹரி, அமெரிக்க நடிகை மேகன் மார்க்கலை 2018ல் திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமணத்தால் மேகனுக்கு கடும் எதிர்ப்பு வெளியாகியிருந்தது. இந்த எதிர்ப்பின் காரணத்தால் அரச குடும்பத்தில் இருந்தும் அவர் விலகியிருந்தார்.
இளவரசர் ஹாரி
தற்போது, தன்னுடைய தாயாரும், இளவரசியுமான டயானாவை கௌரவிக்கும் விதமாக, தொடங்கப்பட்ட அறக்கட்டளையின் இணை நிறுவனர் பொறுப்பில் இருந்தும் அவர் விலகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2006ம் ஆண்டு சென்டேபல் என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளையின் மூலம், எச்.ஐ.வி., நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள், பெண்களுக்கு உதவி செய்து வந்தார்.
அறக்கட்டளையின் தலைமை பொறுப்பில் இருந்து சிம்பாப்வேவைச் சேர்ந்த ஷோபி சந்தவுகா பதவி விலக மறுத்ததால் எழுந்த பிரச்னை காரணமாக, இணை நிறுவனரான லெசோதோ இளவரசர் சீசோவுடன் இணைந்து ஹரியும் அறக்கட்டளை பொறுப்பில் இருந்து விலகியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும், 20 ஆண்டுகளுக்கு மேலாக இளவரசர் ஹாரி இந்த அறக்கட்டளையின் மூலம் எச்.ஐ.வி., நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
    
    
    
    
    
    
    
    
    
    ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
    
    ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri