லண்டன் நீதிமன்றத்தில் முன்னிலையாகிய இளவரசர் ஹாரி
பிரித்தானிய அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹாரி, 'டெய்லி மெயில்' (Daily Mail) பத்திரிகை நிறுவனத்திற்கு எதிரான வழக்கில் லண்டன் நீதிமன்றத்தில் முன்னிலையாகி சாட்சியம் அளித்துள்ளார்.
அதன்போது, அந்தப் பத்திரிகையின் செயல்பாடுகளால் தனது மனைவி மேகனின் வாழ்க்கை "முற்றிலும் நரகமாக" மாறியதாக அவர் உருக்கமாகத் தெரிவித்தார்.
தவறான செய்தி
அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் (ANL) என்ற நிறுவனம், சுமார் 20 ஆண்டுகளாக தனது தனிப்பட்ட தகவல்களைச் சட்டவிரோதமாகச் சேகரித்ததாக இளவரசர் ஹரி உட்பட 7 முக்கியப் பிரமுகர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இதில் எல்டன் ஜோன் போன்ற பிரபலங்களும் அடங்குவர். தான் எப்போதும் 24 மணிநேரக் கண்காணிப்பில் இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டதாகவும், இது தன்னை மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியதாகவும் ஹரி கூறினார்.
தனது முன்னாள் காதலி செல்சி டேவி குறித்தும் பத்திரிகைகள் தவறான செய்திகளை வெளியிட்டன.
தகுந்த ஆதாரங்கள்
இதனால் அவர் தனது நண்பர்களையே சந்தேகப்படும் நிலை உருவானது என்றும், ஒருவரை வேட்டையாடுவது போன்ற உணர்வை அந்தப் பத்திரிகைகள் ஏற்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமக்குத் தேவையானது எல்லாம் ஒரு "மன்னிப்பும், பொறுப்புக்கூறலும்" மட்டுமே என அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பத்திரிகை நிறுவனம், இதற்கான தகுந்த ஆதாரங்கள் இல்லை என்று வாதிட்டுள்ளது.
ஹானரியின் தரப்பு "வைக்கோல் துரும்பைப் பிடித்துத் தொங்குவதாகவும்"அவர்கள் விமர்சித்துள்ளனர்.
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan